அரச வங்கிகளில் முறைகேடுகள்! அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாட்டின் அரச வங்கிகளில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை என இலங்கை வங்கிகள் சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தடயவியல் கணக்காய்வு
மேலும் கூறுகையில்,இலங்கை வங்கியில் தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ளுமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அது மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,புதிய கொடுப்பனவு கருவிகள் மூலம் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள நாட்டு மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் தர்மஸ்ரீ குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியா? ஹீரோவாக களமிறங்கும் இளம் இயக்குநர்.. யார் தெரியுமா Cineulagam
