உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்
உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகினி்றது.
இன்று (12) நிலவரப்படி, உலக தங்கத்தின் விலை $4,266 ஆக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கத்தின் விலை நிலவரம்
இன்று (12) நிலவரப்படி, இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் (11) உடன் ஒப்பிடும்போது ரூ.3,000 அதிகரித்துள்ளது.
அதற்கமைய, இன்று காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் "22 கரட்" தங்கப் பவுன் ஒன்றின் விலை 312,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் இதன் விலை 309,200 ரூபாவாக காணப்பட்டது.
இதேவேளை, நேற்று 336,000 ரூபாவாகக் காணப்பட்ட "24 கரட்" தங்கப் பவுன் ஒன்றின் விலை இன்று 339,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam