எரிபொருள் கியூஆர் குறியீடு மற்றும் விலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
எதிர்வரும் மாதத்தில் எரிபொருள் விலைகளை மேலும் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் கியூஆர் குறியீடு பயன்பாடு
மேலும் கியூஆர் குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

எரிபொருள் விலைகளை குறைப்பதற்காக தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க அரசாங்கம் செயல்பட்டு வருவதால், மக்களுக்கு முதல் வாய்ப்பிலேயே நிவாரணம் வழங்கப்படும்.
மண்ணெண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளையும் ஒரே நேரத்தில் குறைப்பது சாத்தியமில்லை என்றும், எதிர்வரும் மாதத்தில் எரிபொருள் விலைகளில் மேலும் குறைப்பது தொடர்பில் ஆராயப்படும் என்றும் விளக்கமளித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வில் தாக்கம்
மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற சூழ்நிலை காரணமாக உலகளவில் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
கப்பல் கட்டணங்கள் அதிகரிப்பு மற்றும் முன்பதிவு இரத்து போன்ற காரணிகளும் எரிபொருள் விலை உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே கியூஆர் குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.