எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிமுகமாகும் புதிய தீர்மானம்! வெளியான அறிவிப்பு
எரிபொருள் விநியோகம் தொடர்பான சில புதிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர், நிரப்பு நிலைய குறியீட்டு இலக்கம் குறுந்தகவல் மூலம் உரிய நபருக்கு அனுப்பி வைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றினை இட்டு அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
National Fuel Pass Update -
— Kanchana Wijesekera (@kanchana_wij) September 9, 2022
Two New Features added to the NFP QR system
• QR for Non Vehicle Requirements
• Filling Station Code Number with SMS when Transaction completed https://t.co/Z2NJKFHYjm
வாகனம் அல்லாத எரிபொருள் தேவைக்கான QR குறியீட்டு முறைமையும் தயாராக உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, மின்பிறப்பாக்கிகள், புல்வெட்டும் இயந்திரங்கள் உட்பட ஏனைய இயந்திரங்களுக்கான QR குறியீட்டு முறைமைக்கான பதிவு முறைமை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.