எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் நிவர்த்தி செய்யப்பட்டு, அதிகளவிலான எரிபொருள் கையிருப்புக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய,விநியோக குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, கடந்த 4 நாட்களில் அதிக எரிபொருள் பங்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தரையிறக்கப்படும் எரிபொருள்
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன சேமிப்பு முனையம் நாளாந்தம் 4000 மெற்றிக் தொன் டீசலையும், 3000 மெற்றிக் தொன் பெட்ரோலையும் தொடர்ந்து விநியோகிக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
மேலும், 35,000 மெற்றிக் தொன் 92 ரக பெட்ரோல் இன்றிரவு, கப்பலில் இருந்து தரையிறக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Distribution lapses has been rectified & more stocks has been dispatched in the last 4 days. CPSTL will continue to distribute 4000MT Diesel & 3000MT Petrol daily. Requirements for buses & school services has been full filled. Another 35,000MT Petrol 92 cargo will unload tonight.
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 30, 2022