எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெறும் முறைகேடுகள்! வெளியான தகவல்
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகளுக்கு தீர்வு காண இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, இதுவரை சுமார் 200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முறைகேடு
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள முறைகேடுகளை ஆராய்ந்து, வாடிக்கையாளருக்கு தேவையான அளவு மற்றும் தரத்தில் எரிபொருள் வழங்குவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம்.
இந்த திட்டம் இதுவரை வெற்றிகரமாக உள்ளது. வாடிக்கையாளர்களின் புகார்களின் அடிப்படையில், எரிபொருள் இருப்புக்களை மறைத்து வழங்குதல் போன்ற முறைகேடுகளை நாங்கள் ஆய்வு செய்த போது எரிபொருள் நிலையங்களில் குறைந்த எரிபொருள் இருப்பது தெரியவந்தது.
எரிபொருள் மாதிரிகள் சோதனை
"லங்கன் ஐஓசி நிறுவனம் நேற்று எங்களுடன் நடத்திய கலந்துரையாடலில், அதன் பெட்ரோல் நிலையங்களில் உள்ள முறைகேடுகளை களைவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது.
அதேபோல், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள முறைகேடுகளை நீக்குவது தொடர்பிலான கலந்துரையாடலுக்கும் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் அவர்கள் சாதகமான பதிலை வழங்கவில்லை."
"தற்போது, சுமார் 20 எரிபொருள் மாதிரிகள் சோதனைக்காக தொழில்நுட்ப நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் 60 எரிபொருள் நிலையங்களின் மாதிரி சோதனை தொடங்கப்பட்டுள்ளது.