ஆளுநரின் பணிப்புரையில் பொதுமக்களின் தேவைகளுக்கு பதிலளிக்கும் செயற்திட்டம் ஆரம்பம்
வடமாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் தமது அவசரத் தேவைகளை அரசாங்கத்திடம் இருந்தும் அதிகாரிகளிடமிருந்தும் விரைவாக பெறுவதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநரின் செயலாளர் பி.வாகீசன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் அவசரத்தேவைகளுக்கான அவர்களின் அடையாளத்துடனான குரல்கள் ஆளுநரின் செயலகத்தினால் கேட்டறியப்பட்டுள்ளது.
மன்னார், வவுனியா, மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள், அனைத்து கிராம சேவகர்களுக்கும் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் இவ்விடயம் தொடர்பாக தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் செயலகத்துக்கு குரல் பதிவு
முறைப்பாட்டாளர் ஆளுநர் செயலகத்துக்கு குரல் பதிவு மற்றும் மின்னஞ்சல் ஊடாக தகவல்களை பெறுவதற்கு ஆளுநர் செயலாளரினூடாக வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆளுநர் செயலகம், வட மாகாணம், பழைய பூங்கா சுண்டுக்குளி, யாழ்ப்பாணம் ஆகிய முகவரிக்கு ஒவ்வொரு பிரதேச செயலகத்தினாலும் தபால் மூலம் அனுப்பப்படும் கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
அவசரத் தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காகத் திட்டமிடப்பட்ட காலம் 2022ம் ஆண்டு புரட்டாதி 9 முதல் 29 வரை 3 வாரங்களாக அமையும்.
தொடர்பு இலக்கங்கள்
பொது மக்களிடமிருந்து பெறப்படும் தேவைகள் தொடர்பான சமர்ப்பிப்புக்கள் ஆளுநர் செயலகத்திற்கு செயற்படுத்தப்பட்டு நவம்பர் நடுப்பகுதி அல்லது அதற்கு முன்னராகவோ பதிலளிக்கப்படும்.

தேவை ஏற்படின் வடமாகாணசபை அதிகாரிகள் பொதுமக்களைச் சந்திப்பார்கள் உள்ளுராட்சித் திணைக்களம்,வட்டார மட்டத்திலான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அந்தந்த வட்டாரங்களிலுள்ள பொதுமக்களுக்கு இம்முயற்சியை பற்றி மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொதுமக்களின் சமர்ப்பிப்புகளைச் சேகரிக்கும் போது பெறப்பட்ட தேவைகளின் உண்மைத்தன்மையைக் குறுக்குப் பரிசீலனை செய்யவும் ஈடுபடுத்தும் வடமாகாண சபையின் இம்மாவட்டங்களிலிருந்து பின்வரும் அதிகாரிகள் இம்முயற்சிக்கு கைகொடுப்பார்கள்.
பொறியியலாளர் த.ராஜகோபு (தொடர்புக்கு 0773172093) மாவட்ட மட்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், வவுனியா. பொறியியலாளர் ந.சுதாகரன் (தொடர்புக்கு 0777235566) மாவட்ட மட்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், முல்லைத்தீவு றொஹான் (தொடர்புக்கு 0718613399) மாவட்ட மட்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், மன்னார். பிரதேச செயலாளர்கள் தமது பிரதேச செயலகப் பகுதிகளில் மேற்கூறியவற்றைப் பரந்தளவில் விளம்பரப்படுத்தலை ஊக்குவித்தல் வேண்டும்.
இவ்விடயம் சம்பந்தமாக ஏதேனும் விபரம் தேவையாயின் தயவு செய்து லாகினி
நிருபராஜ், உதவிச் செயலாளர், வடமாகாண ஆளுநர் செயலகம் 021 222 0660 என்ற
தொலைபேசி
இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பராசக்தி படத்திற்கு எதிராக மோசமான விமர்சனங்களை பரப்பும் நபர்கள்.. கொந்தளித்த பராசக்தி பட நடிகர் Cineulagam
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri