கறுப்பு சந்தையில் 170 ரூபாய் வரை உயர்ந்த சவர்க்கார விலை
கருப்பு சந்தையில் சவர்க்காரத்தின் விலை 170 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில்,மீரிகம பகுதியில் 70 ரூபாய்க்கான சவர்க்காரத்தின் விலையை 170 ரூபாவாக மாற்றி விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபையின் கம்பஹா மாவட்ட விசாரணைப்பிரிவு தெரிவித்துள்ளது.
விற்பனை விலையில் மாற்றம்
வாடிக்கையாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இன்று நடத்திய சோதனையில், இந்த வர்த்தகர் சவர்க்கார பொதியில் குறிப்பிட்டிருந்த விற்பனை விலையை அழித்து, 170 எனக்கூறி இவ்வாறு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த நபர் சுமார் 300 சவர்க்கார கட்டிகளுடன் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கமைய விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.