பாடசாலை சேவையையும் பகிஸ்கரித்த அரச பேருந்து சேவையினர் - ஆசிரியர்கள் பாதிப்பு (VIDEO)
கிளிநொச்சி அரச பேருந்து சாலை ஊழியர்கள் தமது கடமைகளுக்கு செல்ல எரிபொருள் பெற்று தருமாறு கோரி போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக பாடசாலை சேவையினை முன்னெடுத்த அரச பேருந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் கிளிநொச்சி அக்கராஜன் வைத்தியசாலைக்கு சென்ற ஆசிரியர்கள் பேருந்து சேவைக்காக 4 மணியை கடந்தும் சேவையை பெற முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூர பிரதேசத்திலிருந்து கடமைகளிற்கு செல்லும் அரச சேவையினை பெற்று வந்த நிலையில் இவ்வாறு இன்று சேவையை பெற முடியாதுடன், மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எரிபொருள் பெற்றுத்தருமாறு கோரி மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்
கிளிநொச்சியில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களுக்கு எரிபொருள் பெற்றுத் தருமாறு கோரி மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்று பிற்பகல் 2 மணிக்கு மேற்படி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
கிளிநொச்சி அரச அதிபர்,யாழ்.மாவட்ட அரச அதிபருடன் கலந்துரையாடி அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக தெரிவித்ததை அடுத்து குறித்த போராட்டம் கைவிடப்பட்டது.


Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri