டெங்கிலிருந்து பாதுகாக்க துரிதகதியில் இயங்கும் மூதூர் சுகாதார வைத்திய அதிகார பிரிவு (PHOTO)
திருகோணமலை-மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்தில் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பட்டதாரி பயிலுநர்கள் இணைந்து இப்பரிசோதனையை முன்னெடுத்திருந்தனர்.
இவ்வாறு தோப்பூர் பிரதேசத்தில் வீடுகள், பாடசாலைகள், அரச அலுவலகங்ளில் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது டெங்கு பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்த பல வீடுகள் இணங்காணப்பட்டதோடு அவர்களுக்கு விழிப்புணர்வும் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீன்( Dr. Hilmi Mukaitheen) தெரிவித்தார்.
ஒருசில வாரங்களாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்கள் பலர் இணங்காணப்பட்டுள்ளதையடுத்து இப் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீன் தெரிவித்தார்.
இவ் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீன், பிராத்திய சுகாதார அதிகாரிகள் மற்றும் பட்டதாரி பயிலுனர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










