மீண்டும் அதிகரிக்கப்படும் பாணின் விலை - செய்திகளின் தொகுப்பு (Video)
முட்டை தட்டுப்பாடு மற்றும் விலையுயர்வு ஆகிய பிரச்சினைகளுக்கு இவ்வார காலத்துக்குள் தீர்வு காணாவிட்டால், பாண் உட்பட பேக்கரி உணவுப்பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தாவது முட்டைகளை இறக்குமதி செய்து, நிவாரண விலைக்கு விநியோகிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.
உற்பத்தி செய்யப்படும் முட்டைகளும் 70 ரூபாவை அண்மித்துள்ளது. அதிக விலைக்கும் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியாத நிலை பேக்கரி தொழிற்துறைக்கு ஏற்பட்டுள்ளது.
முட்டை தட்டுப்பாடு மற்றும் விலையுயர்வு ஆகிய பிரச்சினைகளுக்கு இவ்வார காலத்துக்குள் தீர்வு காணாவிட்டால், பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலையை மீண்டும் அதிகரிக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,