பாடகர் சங்கீதன் கைது தமிழர்கள் மீதான இனவாதமே..! சிறிதரன் குற்றச்சாட்டு
இலங்கை நாட்டின் அரசுகள் மாறினாலும், தமிழர்கள் மீதான இனவாதம் முடிவுக்கு வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
தமிழர் பகுதியில் தாயக எழுச்சி பாடலை எடிட் செய்து பாடிய குற்றத்திற்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் மீதான இனவாதம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை நாட்டில் ஆட்சியாளர்கள் மாறினாலும், தமிழர்கள் மீதான இனவாதம் மாறவில்லை. இதனை இன்றும் உறுதிப்படுத்தும் வகையில், கிளிநொச்சியில் தாயக எழுச்சி பாடலை பாடிய இளைஞர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

என்னதான் இவர்கள் இனவாதம் இல்லையென கூறினாலும், தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
இலங்கையில் நிலவும் வீழ்ச்சி பொருளாதாரம் காரணமாக இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து தங்களின் வாழ்க்கையை தொடரும் நிலை உள்ளது. இது குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும்.
எது எப்படி இருப்பினும், தமிழர்கள் மீதான் இனபடுகொலைகளுக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். அதுவரையில் நாமும் குரல் கொடுப்போம் என்றார்.
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
திடீரென பிக்பாஸ் 10வது சீசனில் என்ட்ரி கொடுத்துள்ள சன் டிவி சீரியல் நடிகை... யார் தெரியுமா? Cineulagam
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam