இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் மந்தநிலையில் உள்ளதாக Bloomberg தகவல்
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிவாரணம் பெற்ற போதிலும், கடன் மறுசீரமைப்பு, இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் வரையறுக்கப்பட்ட கையிருப்பு காரணமாக 2023 ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் குறையும் என Bloomberg இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
முன்னர் மதிப்பிடப்பட்ட 4.4 சதவீதத்துடன் ஒப்பிடும்போது முதல் 4 மாதங்களில் 9.9 சதவீதம் பொருளாதாரம் சுருங்கியுள்ளது.
இது முந்தைய நிலைமையை விட இரண்டு மடங்கு அதிகமாகும், இரண்டாவது நான்கு மாதங்களில் பொருளாதாரம் 1 சதவீதம் மெதுவான விகிதத்தில் மீண்டும் வளர்ச்சியடையக்கூடும் என்று Bloomberg பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னதாக, பொருளாதார வளர்ச்சி 2.9 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. 2023 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.7 சதவீதம் என மதிப்பிடப்பட்டாலும், அது 0.7 சதவீதமாக குறையும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 3 பில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு அனுமதியளித்துள்ள நிலையில், சில ஸ்திரத்தன்மை காணப்படுவதாகவும், தற்போதைய பொருளாதார நிலைமை கொரோனா தொற்றுநோய்க்கு முன்னர் இருந்த நிலைமையை நெருங்கி வருவதாகவும் சில பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆசியாவிலேயே அதிவேக பொருளாதார பணவீக்கத்தைக் கொண்ட இலங்கையில், இந்த ஆண்டு முழுவதும் இரட்டை இலக்க பணவீக்கம் தொடரும், இரண்டாம் காலாண்டில் நுகர்வோர் பொருட்களின் விலை 28.8 சதவீதமாக உயரலாம்.
ஆண்டுக்கான சராசரி விலை சதவீதம் சுமார் 25 சதவீதமாக இருக்கும் என அந்த அறிக்கை கூறுகிறது.