வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த அரசாங்கம்
வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்களுக்கு பல வசதிகளை செய்து கொடுப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பணிபுரிந்தவர்கள் அனுப்பிய அந்நிய செலாவணி கடந்த வருடங்களை விட இந்த வருடம் மேலும் குறைவடையலாம் எனவும் அவர் கூறினார்.
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு வசதிகள்

எனினும் அடுத்தடுத்த மாதங்களில் ஒரு முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புவதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு பல வசதிகளை செய்து கொடுப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்பதன் மூலம் அந்நிய செலாவணி வருகை அதிகரிக்கும்.
இது கோவிட் காலத்தில் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தியது. கோவிட் காலத்தில் பலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்துவிட்டனர்.
அவர்கள் அவ்வாறு வந்தபோது இலங்கையில் மாற்றாம் தாய் மனப்பான்மையுடனேயே பார்க்கப்பட்டனர். மனித குண்டுகள் வருவதாகவே கூறப்பட்டது.
உண்டியல் முறையால் ஏற்பட்ட பாதிப்பு

அடுத்ததாக மக்களை பொறுத்தவரையில் தமக்கு வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொள்ளவும் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யவுமே அதிகளவில் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள்.
ஆனால் தற்போது நாட்டில் நிர்மாணங்கள் இடம்பெறுவதில்லை. எனவே மக்கள் டொலர்களை அனுப்பாமல் இருக்கின்றனர். அடுத்ததாக உண்டியல் முறையில் டொலர் அனுப்பியதாலும் எமக்கு வருகின்ற டொலர்களில் வீழ்ச்சி ஏற்பட்டது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri