சுவிஸில் பெரும் மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்!
சுவிட்சர்லாந்தில் பெரும் மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
56 வயதான இலங்கையர் ஒருவரே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார். குறித்த நபர் 2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை 37 போலியான வாகன விபத்துக்களை ஏற்படுத்தி, அதன் மூலம் பெரும் தொகை பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டு பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் குறித்த நபர் இவ்வாறான விபத்துகளை ஏற்படுத்தியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறாக 50 ஆயிரம் பிராங்குளை குறித்த நபர் மோசடி செய்துள்ளதாகவும், கார்களுக்கு ஏற்பட்ட சேதம் 120,000 பிராங்குள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையை சூரிச் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
அத்துடன், சந்தேகநபர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பிராங்குளை செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 16 மணி நேரம் முன்

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam
