ரஞ்சன் ராமநாயக்கவுக்காக ஜெனிவா செல்லும் இலங்கையர்கள்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்காக ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் மனுவை சமர்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தாலியில் மிலானோ நகரில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் இதற்கான திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனடிப்படையில் மிலானோ நகரில் எதிர்வரும் 12 ஆம் திகதி விசேட பேருந்தில் இவர்கள் ஜெனிவாவுக்கான பயணத்தை ஆரம்பிக்க உள்ளனர்.
ஜெனிவாவில் மனித உரிமை ஆணைக்குழுவின் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தில், ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையை வலியுறுத்தும் மனுவை கையளிக்க உள்ளனர்.
இதன் பின்னர் ஜெனிவாவில் இருந்த அன்றைய தினம் மாலை மீண்டும் மிலானோ நோக்கி திரும்பவுள்ளனர்.
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam