அவுஸ்திரேலியாவில் பிள்ளைகளை கொன்றுவிட்டு இலங்கையர் தற்கொலை: நண்பர்கள் வெளியிட்ட உருக்கமான பதிவு
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டமை பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் வசிக்கும் இந்திக குணதிலக என்று அடையாளம் காணப்பட்டுள்ள இலங்கையரான 40வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு (கோஹன்) 6 வயதும், சிறுமிக்கு 4 (லில்லி) வயதும் என அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த நிலையில் நேற்று தனது இரண்டு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு, குணத்திலக்கவும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், மிகுந்த மன அழுத்தம் மற்றும் மனரீதியான பிரச்சினையில் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இம்முடிவை அவர் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து முகப்புத்தகத்தில் குணத்திலக்கவின் நண்பர் ஒருவர் எழுதிய பதிவில்,
உன்னை காப்பாற்ற முடியாததற்கு என்னை மன்னித்து விடு இந்திகா குணத்திலக என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
குணத்திலக வசித்து வந்த தெருவில் வசித்த பலரும் இச்சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதுடன் தமது வேதனைகளையும் பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.
இது குறித்து அயலவர் ஒருவர் கூறுகையில்,
இந்த பகுதி எப்போதும் அமைதியாக இருக்கும், குணத்திலக குடும்பமும் பெரியளவில் வெளியே வர மாட்டார்கள்.
டிவியில் கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்த போது பொலிஸ் சைரன் சத்தம் கேட்டது. இச்சம்பவம் உண்மையிலேயே பயங்கரமானது மற்றும் அதிர்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.
குணத்திலக பிள்ளைகளை கொன்றுவிட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள பல குடும்பங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில் அவர்கள் அதிலிருந்து மீள கவுன்சலிங் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்...
அவுஸ்திரேலியாவில் பிள்ளைகளை கொன்றுவிட்டு இலங்கையர் தற்கொலை! காரணம் வெளியானது