இலங்கையர் கொடூரமாக கொலை! - பாகிஸ்தான் விடுத்துள்ள விசேட அறிவிப்பு
பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரின் குடும்பத்திற்கு நட்டஈடு வழங்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் தகவல் தொடர்பாடல் அமைச்சரும், அரசாங்க ஊடகப் பேச்சாளருமான பவாத் செளத்திரி இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நட்டஈட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள வசிராபாத் வீதியில் அமைந்துள்ள, தனியார் தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணிபுரியும் ஊழியர், ஏனைய ஊழியர்களினால் சித்திரவதைக்கு உள்ளாகி எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட நபர் பிரியந்த குமார என்ற இலங்கையைச் சேர்ந்தவர் என சியால்கோட் மாவட்ட காவல்துறை அதிகாரி உமர் சயீத் மாலிக் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு இரு நாட்டு தலைவர்களும் கடும் கண்டனம் வெளியிட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.....
பாகிஸ்தானில் மிக கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையர்! - இம்ரான்கான் வழங்கியுள்ள உறுதி
பாகிஸ்தானில் இலங்கையர் கொடூரமாக கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன? உறவினர்கள் வெளியிட்ட தகவல்
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்: கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri