துபாயில் சட்டவிரோத செயலில் சிக்கிய இலங்கை பெண்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு
துபாயில் சட்டவிரோதமான முறையில் குழந்தையொன்றினை விற்க முயற்சித்த இலங்கை பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தோனேஷிய பெண் ஒருவர் பணத்தேவை இருப்பதாகக் கூறி, தனக்கு பிறந்த ஆண் குழந்தையை விற்க முயற்சித்துள்ளார்.
இந்த குழந்தையை விற்கும் நடவடிக்கையில் இலங்கை பெண்ணும் மேலும் இருவரும் உதவி செய்துள்ளனர். 45 வயதான குறித்த இலங்கை பெண் 02 மாதங்களேயான குழந்தையை விற்பதற்காக கடந்த பெப்ரவரி மாதம் ஒன்லைன் ஊடாக தகவல் வெளியிட்டுள்ளார்.

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
துபாய் பொலிஸார் இது தொடர்பிலான தகவல்கள் கிடைத்தவுடன், சந்தேகநபர்களைத் தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கமைய, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், குறித்த குழந்தையை வாங்குபவர் போல் நடித்து சந்தேகநபர்கள் மூவரையும் கைது செய்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, மூவர் மீதும் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மூவருக்கும் தலா 03 வருடங்கள் சிறைத்தண்டனையும் 4000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒரு மாத சிறைத்தண்டனையும் 1000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கண்ணே கலைமானே சீரியல் நடிகை... எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா? Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
முடக்கப்பட்டுள்ள நிதியைத் தொட்டுப்பாருங்கள்... ஐரோப்பாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த புடின் News Lankasri