இலங்கை அரச பயங்கரவாதம் அகோரமாக அம்பலமானது: மனோ கணேசன்
இந்நாட்டில் 2005ஆம் வருடத்திலிருந்து தலைவிரித்தாடிய ராஜபக்ச அரச பயங்கரவாதம், உச்சக் கட்டத்தை அடைந்து, இன்று தன் சொந்த மக்கள் மற்றும் வாக்களித்து ஆட்சியில் அமர்த்திய மக்கள் மீதே அகோரமாகப் பாய்ந்துள்ளது. அதன்மூலம் ராஜபக்சர்களின் கோரப் பயங்கரவாத முகம், சகோதர சிங்கள மக்கள் மத்தியில் அம்பலமாகியுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில்,
உலகின் மிக அமைதியான கொழும்பு காலிமுக திடல் போராட்டம், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையிலிருந்து கிளம்பி வந்த அரச பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. இதனால், இனி இலங்கையர்களின் கோ-ஹோம்-கோட்டா, கோ-ஹோம்-ராஜபக்ச என்ற கோஷங்கள், இலங்கையை நோக்கிய சர்வதேச சமூகத்தின் கோஷமாகவும் மாற வேண்டும்.
கொழும்பில் இருக்கின்ற அனைத்து வெளிநாட்டு ராஜதந்திரிகளும், கொழும்பு காலிமுகத்திடல் போராட்டத்தை, சமகாலத்தில் உலகில் நடைபெற்ற மிக அமைதியான, ஒழுக்கமான போராட்டம் என தனிப்பட்ட முறையிலும், பகிரங்கமாகவும் கூறி இருந்தார்கள்.
இந்நிலையில் இப்போராட்டம் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம், இன்று இலங்கையின் வெட்கமற்ற அரச பயங்கரவாதம் மீண்டுமொருமுறை அம்பலமாகி உள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ருதியிடம் கேள்வி கேட்கப்போய் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri
