கொள்ளையிட்டு கட்டிய வீடுகளை தீ வைத்தது நியாயமானது:சமிந்த விஜேசிறி
பணத்தை கொள்ளையிட்டு கட்டிய வீடுகளுக்கு தீவைத்தது நியாயமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இன்னும் கொள்ளையடிப்புகள் நிறுத்தப்படவில்லை. கொள்ளையிட்டவர்களை பாதுகாப்பதன் காரணமாகவே 225 பேர் மீது திருடர்கள் என்ற முத்திரை குத்தப்படுகிறது.
கொள்ளையிட்டிருந்ததால் எனது வீட்டை தீயிட்டாலும் பரவாயில்லை எனவும் சமிந்த விஜேசிறி கூறியுள்ளார்.
கொள்ளையிட்டவர்களின் வீடுகளை தீயிட்டது நியாயமானது என கூறுவார்கள் என்றால், எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள் எவருக்கும் இருக்க வாய்ப்பு கிடைக்காது எனவும் அவர்களிடம் இருப்பது மத்திய வங்கியில் கொள்ளையிட்ட பணம் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
