எரிக் சொல்ஹெய்மின் இலங்கை வருகையால் புதிய சந்தேகம்: தமிழர் தரப்பிற்கு சிக்கல் (Video)
"யுத்தம் நிறைவடைந்து 13ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், எரிக் சொல்ஹெய்மின் இலங்கை வருகை தற்போது தமிழ் தரப்பினரை விட சிங்கள தரப்பினர் மத்தில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது" என மூத்த பத்திரிக்கையாளர் அ. நிக்ஸன் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“கொழும்பில் நேற்று இடம்பெற்ற சிங்கள மாநாடொன்றில் கலந்துகொண்ட சிங்கள ஊடகவியலாளர்கள், அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் எரிக் சொல்ஹெய்மின் இலங்கை வருகை தொடர்பில் பல கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
புலம்பெயர் மக்களின் பிரதிநிதியாக அல்லது புலம்பெயர் தமிழர்களுடைய நோக்கங்களை நிறைவேற்றத்தான் எரிக் சொல்ஹெய்மின் இலங்கை வந்தாரா என்று பல சந்தேகங்களை ஊடகவியலாளர்கள் அமைச்சரவை பேச்சாளரிடம் எழுப்பியிருந்தனர் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்”
இது தொடர்பான முழுமையான தகவல்களையும், இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார சூழ்நிலையில் எரிக் சொல்ஹெய்மின் இலங்கை வருகை தொடர்பிலும், ஐ.நாடுகள் சபை இலங்கை தொடர்பில் எதிர்காலத்தில் எடுக்கக்கூடிய தீர்மானங்கள் தொடர்பில் மூத்த பத்திரிக்கையாளர் அ. நிக்ஸன் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் தெரிவித்த முழுமையான கருத்துக்களை இக் காணொளியில் காணலாம்,