இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் இடையில் காயமடைந்த இலங்கை வீரர்
இலங்கை வீரர் தினேஷ் சந்திமல் ( Dinesh Chandimal ), இங்கிலாந்தின் மார்க் வுட் வீசிய பந்து 149 கிலோ மீற்றர் வேகத்தில் கட்டை விரலில் தாக்கியதால் காயம் அடைந்துள்ளார்.
குறித்த பந்தை சந்திமல்; தடுக்க முற்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இதனையடுத்து அவர் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டதோடு, காயத்தின் அளவை மதிப்பிடுவதற்காக ஸ்கேன் செய்யும் முகமாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு
வலுவான இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக இலங்கை அணி தங்கள் இன்னிங்ஸை நிலைப்படுத்த விரும்புவதால், அவர் களத்தில் இல்லாமையானது, இலங்கை அணிக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் இலங்கைக்கும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவின்போது இலங்கை அணி, தமது இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கட் இழப்புக்கு 204 ஓட்டங்களை பெற்றிருந்தது.
முன்னதாக அந்த அணி தமது முதல் இன்னிங்ஸில் 236 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது
இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 358 ஒட்டங்களை பெற்றது