தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்: ஒருவர் காயம்
இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி, அரிவாளால் வெட்டியதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்குத் தென்கிழக்கே நேற்று முன்தினம் (14.02.2023) மீன்பிடிக்கச் சென்ற நம்பியார் நகரைச் சேர்ந்த 7 மீனவர்களை, 3 படகில் சென்ற 10 இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தி, கட்டையுடன் சென்று தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது, படகு உரிமையாளர் முருகன் வாள் வெட்டுக்குள்ளாகி கையில் காயம் ஏற்பட்டதால் அவர் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், நாகை மீனவர்களிடமிருந்து திசைகாட்டும் கருவி, வாக்கிடாக்கி ஆகியன பறித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
