கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இளைஞர்: பின்னணியில் இலங்கை பெண்
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இலங்கை பயணி ஒருவர் சுமார் 70 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 'குஷ்' போதைப்பொருள் பொதியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (07) காலை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் 'கிரீன் ரோடு' வழியாக விமான நிலையத்திலிருந்து போதைப்பொருள் பொதியை எடுத்துச்செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பில் சுற்றுலா விடுதியை நடத்தும், ஜாஎலயை சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னணியில் இலங்கை பெண்
தாய்லாந்தின் பெங்காங்கிலிருந்து இந்தியாவின் புது டில்லிக்கு 'குஷ்' போதைப்பொருள் பொதியை அவர் கொண்டு வந்து, அங்கிருந்து இன்று காலை சுமார் 07.33 மணிக்கு இந்தியன் எயார்லைன்ஸ் விமானம் AI 277 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளார்.

இவர் 7 கிலோகிராம் 70 கிராம் 'குஷ்' என்ற போதைப்பொருளை 15 பொதிகளில் இரண்டு சூட்கேஸ்களில் இனிப்புகள் அடங்கிய பொதிகளுடன் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சுங்கத்துறையினர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில், தாய்லாந்தில் வசிக்கும், இலங்கை பெண் ஒருவரால், நாட்டிற்கு கொண்டுவருவதற்காக போதைப்பொருள் ஒப்படைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam