நமன் ஓஜா அதிரடி! இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கான இமாலய இலக்கு!
வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் இறுதி போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் அணி இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கு 196 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய லெஜண்ட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக நமன் ஓஜா ஆட்டமிழக்காது 108 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
வினய் குமார் 36 ஓட்டங்களையும், யுவராஜ் சிங் 19 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் நுவன் குலசேகர 29 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.