ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு - அரசாங்கம் அறிவிப்பு
ஐரோப்பிய நாடான போலந்தில், இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக போலந்திற்கான இலங்கைத் தூதர் பிரியங்கிகா தர்மசேன தெரிவித்துள்ளார்.
போலந்தின் முன்னணி போக்குவரத்து மற்றும் தளவாட நிறுவனமான BATIM Sp. zoo இன் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சந்திப்பு கடந்த 7ஆம் திகதியன்று தூதரக வளாகத்தில் நடைபெற்றது. அதற்கமைய, ஐரோப்பாவில் நிறுவனத்தின் விரிவடையும் தளவாட விநியோகத்திற்கு தேவையான இலங்கையை சேர்ந்த தகுதிவாய்ந்த கனரக வாகன ஓட்டுநர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை ஓட்டுநர்களின் தொழில்முறை
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இலங்கை ஓட்டுநர்களின் தொழில்முறை, ஒழுக்கம் மற்றும் நம்பகத்தன்மையை போலந்திற்கான இலங்கைத் தூதர் பிரியங்கிகா தர்மசேன வலியுறுத்தினார்.

மேலும், இந்த வேலைவாய்ப்புகள் குறித்து மேலதிக ஒத்துழைப்புக்காக இலங்கையில் உள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படும் என தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 15 மணி நேரம் முன்
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri