இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்: CID விசாரணையில் வெளியான தகவல்
இந்தியாவின்I(India) - அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய நான்கு இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குழுவொன்றை நியமித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் நகர விமான நிலையத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடந்த திங்கள்கிழமை இந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை
இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய தகவல்கள் கூறுகின்றன.
பயணிகளின் பட்டியலை சரிபார்த்து அவர்களின் அடையாளங்களை கொழும்பில் உள்ள அதிகாரிகளால் உறுதிப்படுத்தியதன் பின்னரே இவர்கள் 4பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொஹமட் நுஸ்ரத், மொஹமட் ஃபரி, மொஹமட் நஃப்ரான் மற்றும் மொஹமட் ரஸ்டீன் ஆகியோர் 27 - 43 வயதுடையவர்கள் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்
சந்தேக நபர்களில் ஒருவர் நீர்கொழும்பில் வசிப்பவர் எனவும் ஏனையவர்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இலங்கையின் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
