FIFA கால்பந்து சம்மேளன தரவரிசை: இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்
FIFA என்ற சர்வதேச கால்பந்து சம்மேளன தரவரிசையில் இலங்கையின் கால்பந்து 193வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இது கடந்த ஆண்டு தேசிய கால்பந்து அணியின் செயல்திறனில் நிலையான முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
பாரிய முன்னேற்றம்
இந்த நிலையில், 2025க்கான புதுப்பிக்கப்பட்ட பட்டியலின்படி, இலங்கை கால்பந்து இப்போது 862.17 புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது.
அத்துடன் ஒரு வருடத்துக்கு முன்னர் 205வது இடத்தில் இருந்து தற்போது, 193 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வெற்றிகள் மற்றும் போட்டிகளை சமநிலைகளுக்கு கொண்டு வந்தமை என்பன இந்த முன்னேற்றத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
அத்துடன் இந்த மாத தொடக்கத்தில் ஆசியக் கிண்ண தகுதிச் சுற்றில் துர்க்மெனிஸ்தானுக்கு எதிரான இலங்கையின் வெற்றி, இலங்கையின் கால்பந்துக்கு பாரிய முன்னேற்றத்தை தந்துள்ளது.



