பிரித்தானியாவில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற இலங்கை தமிழர்!
பிரித்தானியாவில் இடம்பெற்ற பாசிங்ஸ்டோக் மற்றும் டீன் போரோ உள்ளூராட்சி மன்ற தேர்தலில், இலங்கை தமிழர் ஒருவர் உள்ளூராட்சி மன்ற தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த மூன்று உள்ளூராட்சி மன்ற தலைவர்களில் ஒருவராக இலங்கை தமிழரான ஜெய் கணேஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜெய் கணேஷ் சமூகம் சார்ந்த விடயங்களில் மிகவும் ஆர்வம் கொண்டவர். யாழப்பாணத்தில் பிறந்த இவர் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் கொழும்பு இந்து கல்லூரியின் பழைய மாணவராவார்.
லண்டன் பெருநகர பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அவர், உள்ளூர் அரசாங்கத்தில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.
மேலும் இவர் பாடசாலை நாட்களில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் (எஸ்.எல்.பி.சி) பகுதிநேரம் பணியாற்றியுள்ளார். இவர் 2012 முதல் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், தனது வெற்றி குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
“நான் வாழும் பகுதியில் உள்ளூராட்சி மன்ற தலைவராக தெரிவு செய்யப்பட்டிருப்பது ஒரு முழுமையான மரியாதையாகும். எனக்கு வாக்களித்த அனைத்து தரப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
மேலும், பாசிங்ஸ்டோக் மற்றும் டீன் போரோவை ஒரு சிறந்த இடமாக மாற்ற கடினமாக உழைப்பேன் ” என தெரிவித்துள்ளார்.
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri