வெளிநாடு ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர்
மாலைத்தீவில் பேக்ஹோ இயந்திரம் இயக்குபவராக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாலைத்தீவில் உள்ள மற்றொரு தீவுக்கு பேக்ஹோ இயந்திரம் மூலம் பயணித்த போது, அவர் பயணித்த படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.
குருநாகல், பண்டுவஸ்நுவர பகுதியை சேர்ந்த டி.எம். பிரதீப் சஞ்சீவ என்ற 36 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளர்.
படகு விபத்து
கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமையே அவர் மாலைத்தீவுக்குப் சென்றுள்ளார். அங்கு பேக்ஹோ இயந்திரம் இயக்குபவராக வேலை செய்வதுள்ளார்.

சஞ்சீவ 2 நாட்களாக மாலே பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார்.
புதன்கிழமை இரவு, மாலைத்தீவில் உள்ள கே. துல்ஹாகிரியிலிருந்து 1.3 கடல் மைல் தொலைவில் உள்ள எரியாடு ரிசார்ட்டுக்கு அல் மக் பியா என்ற படகில் பேக்ஹோ மற்றும் ஒரு சில உபகரணங்களுடன் சென்றிருந்தார்.
மீட்புக் குழு
படகில் மேலும் 07 பேர் இருந்தனர், மேலும் படகு திடீரென அலைகளில் மோதி கவிழ்ந்தது. விபத்தில் படகில் இருந்த நான்கு பேர் உயிர் தப்பினர், மீதமுள்ள மூவரில் இருவரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

விபத்தின் பின்னர் பிரதீப் சஞ்சீவா காணாமல் போயிருந்தார், மேலும் அவரது உடலும் நேற்று மதியம் மாலைத்தீவு மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்த சஞ்சீவவின் உடல் நாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 19 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
இது மட்டும் நடந்தால் கதையே மாறிடும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் கதை பற்ற போட்ட பதிவு வைரல் Cineulagam
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan