நிர்ணயிக்கப்பட்ட 5 ஆயிரம் கோடி ரூபாயை ஏற்க மறுத்த இலங்கை பிரதிநிதிகள்!!
இரத்தினபுரியில் அகழந்தெடுக்கப்பட்ட 510 கிலோ கிராம் எடை கொண்ட நீல மாணிக்கக் கல்லுக்கு இங்கிலாந்தின் பிரபல மாணிக்கக்கல் ஏலவிற்பனை நிறுவனம் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை விலையாக நிர்ணயம் செய்துள்ளது.
இந்த விலையானது இலங்கை ரூபாயின் பெறுமதியில் 5 ஆயிரம் கோடி ரூபாய். எனினும் குறித்த மாணிக்கக் கல்லின் உரிமையாளர் மற்றும் மாணிக்கல் மற்றும் தங்காபரணங்கள் அதிகார சபையின் பிரதிநிதிகள் இதற்கு இணங்கவில்லை என ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ரத்வத்தே இதனை கூறியுள்ளார்.
இந்த மாணிக்ககல்லுக்கு இலங்கை பிரதிநிதிகள் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை விலையாக நிர்ணயித்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரியில் கிடைத்த 510 கிலோ கிராம் எடை கொண்ட இந்த கல், நீல மாணிக்கக் கற்களை கொண்ட கொத்து என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan