20 வருடங்களுக்கு பின்னர் இலங்கை வீராங்கனை நிகழ்த்திய சாதனை

Cricket Sri Lanka Cricket Sri Lanka Bangladesh Bangladesh Cricket Team
By Renuka May 07, 2023 06:48 AM GMT
Report

இலங்கை - பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியில் இலங்கை வீராங்கனை ஓஷதி ரணசிங்க 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

கடந்த 20 வருடங்களில் மகளிருக்கான ஒருநாள் சர்வதேச போட்டியொன்றில் இலங்கை வீராங்கனை ஒருவர் 5 விக்கெட் வீழ்த்தியமை இதுவே முதல் தடவை என குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 04.05.2023 அன்று எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை மகளிர் அணி 58 ஓட்டங்களால் வென்றுள்ளது.

20 வருடங்களுக்கு பின்னர் இலங்கை வீராங்கனை நிகழ்த்திய சாதனை | Sri Lankan Cricketer Oshadi Udeshika Ranasinghe

ஓட்டங்கள்

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்களைப் பெற்றது. 

அணித்தலைவி சாமரி அத்தபத்து 60 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டறிகள் உட்பட 64 ஓட்டங்களைக் குவித்தார். ஹிர்ஷிதா சமரவிக்ரம 48 பந்துகளில் 45 ஓட்டங்களையும் கவீஷா தில்ஹாரி 15 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி 29.5 ஓவர்களில் 128 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. அணித்தலைவி நிகார் சுல்தானா 51 பந்துகளில் 37 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் ஓஷதி ரணசிங்க 6 ஓவர்களில் 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 

20 வருடங்களுக்கு பின்னர் இலங்கை வீராங்கனை நிகழ்த்திய சாதனை | Sri Lankan Cricketer Oshadi Udeshika Ranasinghe

ஓஷதி ரணசிங்க

மகளிருக்கான ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இலங்கை வீராங்கனை ஒருவர் 5 விக்கெட்களை வீழ்த்தியமை இது 3ஆவது தடவையாகும்.

ஓஷதி ரணசிங்க சிறப்பாட்டக்காரர் என்ற விருதையும்  பெற்றுள்ளார்.

2002ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் சுதர்ஷினி சிவானந்தன் 2 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

20 வருடங்களுக்கு பின்னர் இலங்கை வீராங்கனை நிகழ்த்திய சாதனை | Sri Lankan Cricketer Oshadi Udeshika Ranasinghe

3ஆவது போட்டி இன்று

2003ஆம் மார்ச்சில், மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிராக சந்தமாலி தோலவத்த 16 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

அதன்பின் 20 வருடங்கள் கடந்த நிலையில் இலங்கை சார்பில் ஓஷதி ரணசிங்க 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இத்தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 3ஆவது போட்டி எஸ்எஸ்சி மைதானத்தில் இன்றைய தினம் (07.05.2023) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US