அமைச்சுப் பொறுப்பை வேறொருவருக்கு வழங்கத் தயாராகும் அமைச்சர்
தற்போது நான் வகிக்கும் அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகி நாட்டுக்கு ஆதரவாக வருவோருக்கு வாய்ப்பு வழங்கத் தயாராக உள்ளேன் என பௌத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பெரிய அமைச்சரவை நாட்டுக்கு உதவவில்லை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாங்கள் ஏற்கனவே தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளோம். அமைச்சரவையில் பல கட்சிகள் உள்ளன, மற்றவர்களும் பங்கேற்க வேண்டும். நாங்கள் எங்கள் அமைச்சுப் பதவிகளை வழங்கத் தயாராக இருக்கிறோம்.

மற்றவர்கள் வந்தால் எனது அமைச்சுப் பதவியை நான் கைவிடத் தயாராக இருக்கின்றேன். பெரிய அளவிலான அமைச்சரவைகள் நாட்டுக்கு உதவவில்லை.
எனவே, தற்போது நான் வகிக்கும் அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகிவிட்டு நாட்டுக்கு ஆதரவாக வருவோருக்கு வாய்ப்பு வழங்கத் தயாராக உள்ளேன் என குறிப்பிட்டார்.
you my like this video
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan