நாடு திரும்பிய இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
51.4 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள்
கைது செய்யப்பட்டவர் மூதூர் சேர்ந்த 32 வயது வர்த்தகர் என தெரியவந்து்ளளது.

தாய்லாந்தின் பேங்கொக்கில் கொள்வனவு செய்த போதைப்பொருள், அங்கிருந்து இண்டிகோ எயார்லைன்ஸ் விமானம் மூலம் இந்தியாவின் பெங்களூருக்கு வந்தடைந்தது.
இந்த விமானம் இன்று அதிகாலை 12.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
சந்தேக நபர் கொண்டு வந்திருந்த 02 சூட்கேஸ்களுக்கு போலி அடிப்பாகங்களை தயாரித்து, அவற்றில் போதைப்பொருள் மறைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.