இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை - வெளிநாடு செல்ல முடியாத நிலையில் இளைஞர்கள்
இலங்கையில் எந்த ஒரு கோவிட் தடுப்பூசியும் இல்லாதமையினால் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு செல்ல எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாடு செல்ல எதிர்பார்ப்பவர்கள் தினசரி கோவிட்டை தடுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான இலத்திரனியல் சான்றிதழ்களை பெற வருகின்றார்கள். அவர்களில் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாகும்.
கடுமையான சிக்கல் நிலைமை
மேற்கத்திய நாடுகள் பல இன்னமும் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ்களை கேட்பதனால் வெளிநாடு செல்வதில் கடுமையான சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். தற்போது மேற்கத்திய நாடுகளில் புதிய மாறுபாடுகள் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் தடுப்பூசி இல்லாத ஒரு நிலையில் இந்த மாறுபாடுகள் நாட்டிற்குள் நுழைவதற்கும் வாய்ப்புகள் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியா? ஹீரோவாக களமிறங்கும் இளம் இயக்குநர்.. யார் தெரியுமா Cineulagam

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
