பொருளாதார நெருக்கடியிலும் இலங்கைக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்
பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ள நிலையிலும், சுற்றுலாத்துறையில் சாதகமான நிலையை வெளிப்படுத்தியுள்ளது.
உலகிலேயே அதிக பணம் செலவழிக்காமல் பெப்ரவரி மாதத்தில் விடுமுறையை கழிக்க சிறந்த நாடு இலங்கை என்று பிரித்தானியாவின் சுற்றுலா இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த வருடத்தில் 12 மாதங்களில் வேறு நாடுகளுக்கு சென்று விடுமுறை எடுக்கக் காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்காக அதிகப் பணம் செலவழிக்காமல் நல்ல சேவையைப் பெறக்கூடிய 12 நாடுகளின் பெயர்களை ஐ நியூஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் 75வது சுதந்திர தினம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இது நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளது.
மேலும், பெப்ரவரி மாதத்தில் விமான ரிக்கெட் விலை குறைந்த அளவிலேயே இருந்ததாகவும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 245 ரூபாயாக இருந்த ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்று தற்போது 441 ரூபாயாக மாறியுள்ளது. இதன் விளைவாக இலங்கையின் மலைப் பிரதேசத்திற்கு 15 நாள் பயணத்திற்கு ஒரு நபருக்கு 1845 பவுண்டுகள் செலவாகும் என குறித்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் ஜனவரியில் மோல்டா, பெப்ரவரியில் இலங்கை, மார்ச்சில் பல்கேரியா, ஏப்ரலில் அல்பேனியா, மே மாதம் மடீரா தீவுகள், ஜூன் மாதம் பார்படாஸ், ஜூலையில் துருக்கி, ஆகஸ்ட்டில் பெல்ஜியம், செப்டம்பரில் ஜோர்டான், ஒக்டோபரில் எகிப்து, நவம்பரில் கிரீஸ், டிசம்பரில் கிரீஸ் பிக் ஆகிய நாடுகளுக்கு குறைந்த செலவில் செல்ல முடியும் என பெயரிடப்பட்டுள்ளது.