மதுபான உரிம பத்திர விற்பனையில் மோசடி: சஜித் குற்றச்சாட்டு

Sajith Premadasa Sri Lanka Economic Crisis Sri Lanka Tourism
By Dharu Sep 07, 2023 07:00 AM GMT
Report

இலங்கையில் கடந்த காலங்களில் பெருமளவிலான மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதுடன்,சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்கிறோம் என்ற போர்வையில் தற்போதைய அரசாங்கம் மதுபான உரிம பத்திரங்களை தனது நண்பர்களுக்கு விற்பனை செய்வதாக சந்தேகம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று(07.09.2023) பியர் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவது தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

‘‘சில பகுதிகளில் புதிதாக மதுபானக் கடைகள் அமைக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர். விகாரைகள் மற்றும் பாடசாலைகளுக்கு அருகாமையில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் சிறார்களும் மதுவுக்கு பலியாகும் அபாயம் எழுந்துள்ளது.

கோட்டாபயவை கோபப்படுத்திய செய்தி: உடன் பிறப்பிக்கப்பட்ட கட்டளை - வெளியான அதிர்ச்சி தகவல்

கோட்டாபயவை கோபப்படுத்திய செய்தி: உடன் பிறப்பிக்கப்பட்ட கட்டளை - வெளியான அதிர்ச்சி தகவல்

அரசாங்கத்தின் பொறுப்பு

மக்கள் மது அருந்தும் பழக்கத்திற்கு அதிகமாக உள்ளாகும் விடயம், நல்லொழுக்கமுள்ள சமுதாயத்திற்கு தடையாக உள்ளது.

இவ்வாறான நிலை உருவாகாமல் பார்த்துக் கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு.

மதுபான உரிம பத்திர விற்பனையில் மோசடி: சஜித் குற்றச்சாட்டு | Sri Lanka Tourism Developed Economy Crisis

தனது அரசியல் நண்பர்களுக்கு பியர் உரிமம் அல்லது மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதால் பல பகுதிகளில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலாத் தொழில் செயல்படாத பிரதேசங்களிலும் இந்த பியர் உரிம பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத் தேர்தலுக்காகப் பணம் தேடுவதற்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உரிமப்பத்திரம் என்பதை இது காட்டுகிறது.

இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி தொகை கணக்கெடுப்பை நடத்தவுள்ளது. அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக இது குறித்த தகவல் அறிவிக்கப்பட வேண்டும்.

இலங்கையில் 250 ரூபாய்க்கு எரிபொருள்: கோப் குழுவில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

இலங்கையில் 250 ரூபாய்க்கு எரிபொருள்: கோப் குழுவில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

குற்றவியல் சட்டத்தின் மூலம் தண்டனை

நாட்டில் போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டி மதுபானம் விற்பனை செய்யும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுமார் 100 மதுபானக் கடைகளில் இருந்து சுமார் 100,000 மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மதுபான உரிம பத்திர விற்பனையில் மோசடி: சஜித் குற்றச்சாட்டு | Sri Lanka Tourism Developed Economy Crisis

தற்போது ராஜகிரியில் உள்ள கலால் திணைக்கள கட்டடத்தில் போத்தல்களைப் பதுக்கி வைத்து, போலி ஸ்டிக்கர்களுக்கு பதிலாக உண்மையான ஸ்டிக்கர்களை ஒட்டி பிரச்சினைகளை மறைக்க பெரும் சதி நடந்து வருகிறது.

இவ்வாறு,பாதுகாப்பு ஸ்டிக்கர்களை தவறாக அச்சிடுவது கூட்டு சதி. இதற்கு குற்றவியல் சட்டத்தின் மூலம் தண்டனை வழங்க வேண்டும். இது ஒரு ஆபத்தான பிரச்சினை. இதனை சாதாரணமாக தீர்த்து வைத்திட முடியாது.

இந்த மோசடிகளை மூடிமறைப்பதற்கு நிறுவனங்களின் பிரதானிகள் உட்பட சில அரச அதிகாரிகள் செயற்பட்டு வருகின்றனர்.

ஒன்றை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். மதுபானம் கடத்தலை பிரபலப்படுத்த வேண்டாம். அதனைத் தடுத்து உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிகளை குறையுங்கள்'' என தெரிவித்துள்ளார்.''

வெளிநாடு செல்வோரின் குடும்பங்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்: வெளியான அறிவிப்பு

வெளிநாடு செல்வோரின் குடும்பங்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்: வெளியான அறிவிப்பு

முல்லைத்தீவில் பல வருடங்களாக பயன்படுத்தாது கிடக்கும் பழம்பாசி சந்தை (Photos)

முல்லைத்தீவில் பல வருடங்களாக பயன்படுத்தாது கிடக்கும் பழம்பாசி சந்தை (Photos)

மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US