மிகப்பெரிய சுற்றுலா மையமாக மாறவுள்ள கிளிநொச்சி
பூநகரி கௌதாரி முனை பகுதியானது எதிர் காலத்தில் இலங்கையில் மிகப்பெரிய சுற்றுலா மையமாக மாற உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பூநகரி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கூட்டுறவு வார நிகழ்வும் முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகருமான தி.இராசநாயகம் அவர்களது நினைவான கூட்டுறவு வார நிகழ்வும் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் மூத்த தலைவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வும் (11-11-2025) நேற்று நடைபெற்றது.
மிகப்பெரிய சுற்றுலாத்தளம்
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து குறிப்பிடுகையில்,
பூநகரி வறுமைப்பட்ட ஒரு பிரதேசமாக இருக்கலாம் இங்கே வாழ்கின்ற நாங்கள் வறுமையானவர்களாக இருக்கலாம் ஆனால் எங்கோ இருப்பவர்களுக்கு பூநகரின் உடைய. வளங்கள் பற்றி சிந்திக்கின்றனர் கடந்த காலங்களிலே ரணில் விக்ரமசிங்க பூநகரி பற்றிய பார்வையுடன் இருந்துள்ளார்.
இப்போதுள்ள அரசும் பூநகரியில் ஒரு பார்வையை வைத்திருக்கின்றது.
பல்வேறு வளங்கள் நிறைந்த இந்தப்பகுதியில் உள்ள வளங்களை யாரும் சுரண்டி செல்ல விடாது அதனை தடுக்க வேண்டும் கௌதாரிமுனை என்பது இலங்கையிலே மிகப்பெரிய சுற்றுலாத்தளமாக மாற உள்ளது தற்போதைய வரவு செலவுத் திட்டத்தில் கிளிநொச்சி என்று குறிப்பிடுவதை விட பூநகரி என்ற வார்த்தைகளே உள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிகழ்வுகள்
நிகழ்வின் முன்னதாக முதன்மை விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பூநகரி வாடியடி சந்தியிலிருந்து கறுக்காய் தீவு மாணவர்களின் இன்னிய மற்றும் பேண்ட் வாத்திய அணியுடன் பூனகரி பலநோக்கு சங்க தலைமை காரியாலயத்துக்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுல ராஜா மற்றும் மதத் தலைவர்கள் கூட்டுறவு துறை சார்ந்த தலைவர்கள் பணியாளர்கள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது




உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan