அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு வரியை குறைக்கவுள்ள இலங்கை
அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், இறக்குமதிகள் மீதான வரிகளைக் குறைக்கவும் இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பில், அடுத்த வாரத்துக்குள் அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்துவதற்கான எதிர்பார்ப்பை கொண்டிருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தைக்காக, ஆடைத் துறையின் முக்கிய பிரதிநிதிகள், ரப்பர் திணைக்கள மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் அடங்;கிய ஒரு குழுவை இலங்கை அமைத்துள்ளது. இதனடிப்படையில், இலங்கை அதிகாரிகளுக்கும் ஆசியாவுக்கான அமெரிக்க பிரதிநிதிக்கும் இடையிலான உரையாடல்களின் போது அமெரிக்காவின் நல்லெண்ணம் காட்டப்பட்டுள்ளது.
இறக்குமதி பொருட்களுக்கு வரி
இதனையடுத்து பற்றாக்குறை மற்றும் அமெரிக்காவுக்கான கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதற்கு, இலங்கை அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த வகையில், விலங்கு தீவனத்தை அமெரிக்காவில் இறக்குமதி செய்யும்போது, வரிகளைக் குறைத்து, அந்த நாட்டில் இருந்து இறக்குமதியை அதிகரிக்க உதவுவதாகவும் இலங்கை உறுதியளித்துள்ளது.
அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக,அடுத்த வாரத்துக்குள் இலங்கை அரசாங்கத்தின் குழு, அமெரிக்காவுக்கு புறப்பட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடைத்தொழில் துறையினர்
இதற்கிடையில், கொழும்பில் உள்ள ஆடை உற்பத்தியாளர்களிடம் ஏப்ரல் 9 க்குப் பின்னர் பொருட்களை அனுப்ப வேண்டாம் என்று , அமெரிக்காவின் கொள்வனவாளர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர், இது தொழில்துறையில் அதிகரித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, 2010 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து ஜி.எஸ்.பி பிளஸ் சலுகைகளை நாடு இழந்ததை விட இலங்கையில் ஆடைத் துறையின் நிலைமைகள் மோசமாக இருக்கக்கூடும் என்று ஆடைத்தொழில் துறையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ் Cineulagam

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri
