இலங்கை தொலைத்தொடர்புகள் திருத்தச்சட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றில் விசேட நியாயாதிக்க மனு
நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் அண்மையில் சேர்க்கப்பட்ட இலங்கை தொலைத்தொடர்பு திருத்தம் சட்டமூலத்தை எதிர்த்து விசேட நியாயாதிக்க மனுவொன்று உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மீடியா லோ ஃபோரம் (உத்தரவாத) லிமிடெட்(Media Law Forum (Guarantee) Limited) இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
இந்த யோசனைக்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஒப்புதலுடன், வாக்கெடுப்பின் மூலம் மக்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று மனுதாரர் தரப்பு கோரியுள்ளது.
இந்த யோசனை, அரசியலமைப்பின் வரம்புக்கு புறம்பானது என்ற அடிப்படையில் அதன் அரசியலமைப்புத் தன்மையை மனுதாரர் தரப்பு சவாலுக்கு உட்படுத்தியுள்ளது.
முன்மொழியப்பட்ட இந்த யோசனை, துஸ்பிரயோகத்திற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது.
அத்துடன்; கட்டணங்களை அங்கீகரிக்க அல்லது நிர்ணயிக்கும் பரந்த அதிகாரம் சில தொலைத்தொடர்பு நிறுவன இயக்குனர்களுக்கு உள்ளமையால், அவர்களுக்கு சாதகமாக இந்த யோசனை பயன்படுத்தப்படலாம்.
இது திருத்தத்தின் பரந்த தன்மை காரணமாக சந்தையின் நேர்மை மற்றும் நடுநிலைமை, குறைமதிப்பிற்கு உள்ளாகிறது என்றும் மனுதாரர் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
