நள்ளிரவுடன் இருளில் மூழ்கப்போகும் இலங்கை - யாவும் ஸ்தம்பிக்கும் என எச்சரிக்கை
தமது கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காத நிலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட மின்சார சபை பொறியிலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகவும், இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு நடைமுறைக்கு வருவதாகவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர தெரிவித்துள்ளார்.
தங்கள் கோரிக்கைக்கு அமைச்சர் செவிசாய்க்கவில்லை.நாளைய தினம் மின்சார சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரசியல்வாதிகள் நாட்டை பேரழிவிற்குள் தள்ளியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நள்ளிரவு 12 மணி முதல் பணியிலிருந்து விலகல்
இன்று நள்ளிரவு 12 மணி முதல் பணியில் இருந்து விலகுவோம். முடிந்தால் யாராவது பொறுப்பேற்று இந்த அமைப்பைச் செயல்பட வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.இல்லையெனில், அனைத்து மின் ஊழியர்களும் படிப்படியாக விலகுவார்கள்.
அத்தகைய சூழ்நிலையில் கணினி கட்டமைப்பை பாதுகாக்க, அனைத்து இயந்திரங்களும் கோட்பாட்டளவில் நிறுத்தப்பட வேண்டும்.அனைத்து ஊழியர்களும் காலை 8 மணிக்குள் வெளியேறுவார்கள். அப்போது நாட்டில் மின்சாரம் என்ற ஒன்று இருக்காது என தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகளில் சேவைகள் தடைப்படும். நோயாளிகளின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.