தென்கொரியாவில் இருந்து 500 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்ளவுள்ள இலங்கை
தென்கொரியாவில் இருந்து இலங்கை 500 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.
இதற்கான உடன்படிக்கை இன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
இலங்கையின் நிதியமைச்சுக்கும், தென்கொரியாவின் எக்ஸிம் வங்கிக்கும் இடையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிக்கலயும் தென்கொரிய எக்ஸிம் வங்கியின் சார்பில் கொரியாவுக்கு இலங்கைக்கான தூதுவர் வூன்ஜின் ஜியோங் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
2020 - 2022ஆம் ஆண்டுகளுக்கான அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடன் நிதி 40 வருடங்களில் மீளச்செலுத்தப்படும் வகையில் 10 வருட
அவகாசத்துடன் 0.15 வட்டிவீதத்தில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri