பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறை! கல்வி இராஜாங்க அமைச்சரின் விளக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறைக்கு பதிலாக 18ஆம் திகதி பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள இந்து மக்கள் நாளையதினம்(12) தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
விசேட விடுமுறை
இந்நிலையில், நாளையதினம் ஞாயிற்றுக் கிழமை என்ற காரணத்தினால் எதிரவ்ரும் திங்கட்கிழமை 13ஆம் திகதி நாட்டில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவிக்கையில்,
தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான மாற்றீடாக எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |