இலங்கையின் அடுத்த ஜனாதிபதி..! புலனாய்வு அறிக்கையை கூறும் அரசியல்வாதி
மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்பதை புலனாய்வு அறிக்கைகள் உறுதிப்படுத்தியிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நாமல் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்பதுதான் கிராமங்களில் பேசுபொருளாக உள்ளது. அனைத்து அறிக்கைகளும் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் பயம்
அரசாங்கத்தின் எந்தவொரு விசாரணையையும் எதிர்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம்.
தற்போதைய அரசாங்கம் பொதுமக்களை தவறாக வழிநடத்துகின்றது. அவர்கள் மக்களை ஏமாற்றி அவர்களின் மனதை குழப்பி ஆட்சிக்கு வந்தார்கள்.
ஆனால், இப்போது மக்கள் உண்மையைப் புரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். அரசாங்கம் இப்போது பயந்து விட்டது.
அடுத்த ஜனாதிபதி நாமல்
நாமல் ராஜபக்ச ஆட்சிக்கு வருவதைத் தடுக்க அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிக்கின்றது. ஆனால் நாமல் ராஜபக்ச தான் அடுத்த ஜனாதிபதி என்பது அவர்களுக்கும் தெரியும்.
பல வெளிநாட்டு தூதரகங்களுக்குச் சென்றபோது இராஜதந்திரிகளும் இதே கருத்தைத் தெரிவித்தனர்.
நாங்கள் பல தூதரகங்களுக்குச் சென்றோம். நாமல் ராஜபக்ச அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்று அவர்கள் எங்களிடம் சொன்னார்கள்” என தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - ராகேஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
