இலங்கையில் இலஞ்ச - ஊழலுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள புதிய நடவடிக்கை
இலஞ்ச, ஊழலை ஒழிக்காவிட்டால் அது இலங்கையை ஒழித்து விடும் என்று ஓய்வு பெறும் இறைவரி திணைக்கள ஆணையாளர் டி.ஆர்.எஸ்.ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் வரி செலுத்துவோர், ஊழல் அதிகாரிகள் தொடர்பில் நேரடியாகவோ அல்லது பெயர் தெரியாமலோ முறையிட ஊக்குவிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறியுள்ளதாவது, உள்நாட்டு வருவாய்த் திணைக்களம், அமைப்பினுள் ஊழலை அகற்றுவதற்கான பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
முறைப்பாட்டுப் பெட்டி
இதில் ஊக்குவிப்பு அடிப்படையிலான பொறிமுறையும் அடங்கும். அத்துடன், நேர்மையான பணியாளர்கள், இலஞ்சம் வழங்க முயற்சிக்கும் வரி செலுத்துவோர் தொடர்பில் ஆதாரங்களுடன் முறைப்பாடுகளை அளிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு இலஞ்சம் வழங்கப்படுவது அல்லது கோரப்படுவது உட்பட எந்த ஊழலையும் பொறுத்துக்கொள்ள முடியாது.
இந்த நிலையில், திணைக்கள தலைமை அலுவலக வளாகத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால், முறைப்பாட்டுப் பெட்டியை அமைப்பதும் புதிய செயல்திறனுள்ள நடவடிக்கைகளில் அடங்கும்.
இதன்போது முறைப்பாட்டாளருக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |