இலங்கையின் முதல் மின்கல ஆற்றல் சேமிப்பு கட்டமைப்பு! எரிசக்தித்துறையில் புதிய திருப்புமுனை
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, நாட்டின் முதல் வர்த்தக அளவிலான மின்கல ஆற்றல் சேமிப்பு பொறிமுறை (BESS) சமீபத்தில் கொழும்புத் துறைமுகத்தில் வெற்றிகரமாக இறக்கப்பட்டுள்ளது.
கடந்த 20ம் திகதி கொழும்புத் துறைமுகத்திற்கு வந்த ஒரு கொள்கலன் கப்பல் மூலம் இந்த BESS பொறிமுறை அலகுகள் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி
காலி மற்றும் மாத்தறையில் அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இந்த கட்டமைப்புகள் நிறுவப்பட உள்ளன. எதிர்வரும் மாதங்களில் இவை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தேசிய கட்டமைப்பு செயற்படுத்துனருக்கு (மின்சார சபை) (NSO) பெரும் ஒத்துழைப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியின் நிலையற்ற தன்மையையும், அதிகபட்ச தேவை காலங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களையும் நிர்வகிப்பதே இலங்கையின் தேசிய மின்சார சபை நீண்ட காலமாக எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
ஆற்றல் சேமிப்பு அமைப்பு
இந்த கட்டமைப்பின் மூலம் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்கப்படும் ஒவ்வொரு மெகாவாட் (MWh) மின்கல சேமிப்புத் திறனும், மேலும் நிலையான மற்றும் மீள்திறன் கொண்ட ஒரு மின் அமைப்பை உருவாக்க உதவும்.
இது வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திற்கும் நம்பகமான மற்றும் தூய்மையான ஆற்றலை வழங்க வழிவகுக்கும்.
ஆற்றல் சேமிப்பு அமைப்புகளின் உலக முன்னணி உற்பத்தியாளரான சீனாவின் சன்க்ரோ பவர், இந்தத் திட்டத்திற்கான தொழில்நுட்ப வழங்குநராக உள்ளது.
Expolanka Project Logistics, இந்தத் தனித்துவமான மற்றும் பிரம்மாண்டமான திட்டத்திற்கான தளவாடங்கள் மற்றும் பொருட்கள் விநியோகத்தை கையாண்டு வருகிறது.
கொழும்பில் பல பகுதிகளில் பெண்களை அச்சுறுத்தி வந்த நபர் அதிரடியாக கைது - சிக்கிய பெருந்தொகை தங்க நகைகள்
செவ்வாய் - குரு உருவாக்கும் திரிஏகாதச யோகம்... ஜூன் மாதத்தில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! Manithan
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri