இலங்கையின் கோவிட் தொற்றின் தீவிரம்! - உலகளாவிய புள்ளிவிவரங்களை விட இறப்பு வீதம் உயர்வு
உலகலாவிய ரீதியில் கோவிட் தொற்றின் நாளாந்த வழக்கு - இறப்பு சதவீதம் அல்லது நோய்த்தொற்றுகளுடன் ஒப்பிடும்போது நாளாந்த கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1.4 சதவிகிதம் குறைவாக உள்ளது.
எனினும், இலங்கையில் இந்த எண்ணிக்கை 5 சதவிகிதம் உயர்வாக உள்ளதாகவும், இது நாட்டில் கொரோனா வைரஸ் சூழ்நிலையின் தீவிரத்தை குறிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில், இலங்கையின் தினசரி உயிரிழப்பு விகிதம் 5 சதவீதமாக இருந்தது. ஆகஸ்ட் 06 ம் திகதி அறிக்கையின்படி, இது 3.5 சதவீதமாக இருந்தது. தரவு முறையே 3.3, 3.7, 3.9, மற்றும் 4.2 என சதவிகிதம் அதிகரிப்பதை குறிக்கிறது.
இதற்கிடையில், கடந்த 10 நாட்களில் மட்டும் 1,130 கோவிட் -19 உயிரிழப்புகளை இலங்கை பதிவு செய்துள்ளது.
இது இலங்கையின் நோய் தொற்றுநோய் நிலைமையின் ஒரு முக்கியமான கட்டமாக கருதப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
