சர்வதேச தேயிலை ஏற்றுமதியில் சீனாவிற்கு அடுத்த நிலையில் இலங்கை
சர்வதேச ரீதியாக தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக அந்நிய செலாவணியினை பெறும் நாடுகளில், சீனாவிற்கு அடுத்ததாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தேயிலை கலவை தொழில்நுட்பத்தில் தனித்துவத்தை இலங்கை தொடர்ந்து பேணுவதனால் சர்வதேச சந்தையில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் தெரிவாகியுள்ள கணேஷ் தெய்வநாயகம் தெரிவித்துள்ளார்.
அதிகரித்த ஏற்றுமதி கட்டணம்
மேலும், ஒரு கிலோ கிராம் இந்திய தேயிலையின் ஏற்றுமதி கட்டணம் 3.58 அமெரிக்க டொலர்களாகவும், கென்யாவின் ஏற்றுமதி கட்டணம் 2.60 அமெரிக்க டொலர்களாக உள்ள நிலையில், இலங்கை தேயிலையின் சராசரி கட்டணம் 5.10 அமெரிக்க டொலர்களாகவும் திகழ்வது வரவேற்கத்தக்க விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியான முயற்சி, சர்வதேச தடைகளில் இருந்து வெளியேறுதல் மற்றும் நவீன தன்மையினை அறிமுகப்படுத்தல் போன்ற காரணிகளினால் இந்த சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
மத்திய கிழக்கில் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்கா! ஹோர்முஸ் நீரிணையை 'சிவப்புக் கோடு' என்று அறிவித்த ஈரான்
ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan
மோசமான முத்துவேல் உடல்நிலை, குடும்பத்திடம் உண்மையை உடைத்த பாண்டியன்... பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam