மீண்டும் இலங்கையில் போராட்ட அலை! அரச உயர்மட்டத்திற்கு சென்றுள்ள கடிதம்
அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் மீண்டும் ஒரு முறை போராட்ட அலை உருவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ர ஆராச்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மீண்டும் ஒரு எதிர்ப்பு அலை
நாடு முழுவதும் மகா சங்கத்தினரும், மதகுருமார்களும் மின்சாரக் கட்டணத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது அரசாங்கத்திற்கும் நாட்டுக்கும் நல்லதல்ல என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மீண்டும் ஒரு எதிர்ப்பு அலையை ஏற்படுத்தக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மகா சங்கத்தினரும், மதகுருமார்களும் மின்சாரக் கட்டணத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது அரசாங்கத்திற்கும் நாட்டுக்கும் நல்லதல்ல , பெருமளவான மின்சாரக் கட்டணம் காரணமாக நாட்டில் பெரும்பாலான மக்கள் தமது வாழ்வாதாரத்தைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
நிவாரணம் வழங்கப்பட வேண்டும்
இவ்வாறான நிலை மீண்டும் ஒரு எதிர்ப்பு அலையை ஏற்படுத்தக் கூடும். எனவே வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் மின்சாரக் கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
அதே போல நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு அரச வங்கிகளில் இருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்கு பணம் கிடைக்காத நிலை காணப்படுகிறது.
எனவே விவசாயிகளின் நெல் அறுவடையை உத்தரவாத விலையில் விரைவாக பெற்றுக் கொள்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஏற்பாடுகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது